நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் நியுசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா. 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 25 வயது நிரம்புவதற்குள் அதிக ரன்கள் அடித்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1999 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்து அவர் இந்த சாதனையை படைத்தார். நேற்று ரச்சின் ரவீந்திரா அடித்த ரன்கள் மூலம் இந்த இலக்கை தாண்டி சென்று சச்சின் சாதனையை முறியடித்தார்.
இதையடுத்து இன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 1.80 கோடி ரூபாய்க்கு மட்டும் ஏலத்தில் எடுகப்பட்டார். அவரை ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சி எஸ் கே அணி எடுத்துள்ளது.
சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளது குறித்து பேசியுள்ள ரச்சின் ”முதல் முறையாக நான் ஐபிஎல் விளையாட போகிறேன். சிறந்த வீரர்களான தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கும் சென்னை அணியில் விளையாட போவதை நினைத்தால் இப்போதே பெருமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் சி எஸ் கே அணிக்காக விளையாடும் நியுசிலாந்து வீரர்கள் என்னிடம் கூறியுள்ளனர். சிஎஸ்கே ரசிகர்களை கண்டிப்பாக நான் மகிழ்விப்பேன்” எனக் கூறியுள்ளார்.