இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடர் ஒரு வாரகாலம் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சுமூகமானதைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.
இதையடுத்து இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் போட்டி நடப்பதற்கான வாய்ப்பு 50 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஒரு வேளை மழையால் போட்டி ரத்தானால் பெங்களூரு அணி முதல் ஆளாக 17 புள்ளிகளோடு ப்ளே ஆஃப்க்கு சென்றுவிடும்.