நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வரும் சன்ரைசர்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் டெல்லி அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது.
பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் சீசனில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் ஆரம்பமே சன்ரைசர்ஸ் பேட்டர்களை கட்டுப்படுத்த தவறியது.
சன்ரைசர்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனான ட்ராவிஸ் ஹெட் சர்வ சாதாரணமாக 32 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என விளாசி 89 ரன்களை குவித்தார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்களும், சபாஸ் அகமத் 29 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 266 ஆனது. இதன்மூலம் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோரான 263 ரன்கள் என்ற சாதனையை இந்த சீசனில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது சன்ரைசர்ஸ்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆரம்பம் முதலே தடுமாற்றம் காணத் தொடங்கியது. ஓப்பனிங் இறங்கிய ப்ரித்வி ஷா முதல் ஓவரிலேயே அவுட் ஆக, வார்னர் இரண்டாவது ஓவரில் அவுட். ஜேக் ப்ரேசர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 65 ரன்களை குவித்து அவுட் ஆனார். அதை தொடர்ந்து விளையாடியவர்கள் அதிரடி ஆட்டத்தை அளிக்காததால் டெல்லி அணி 19.1வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.