Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை சமாதானப்படுத்த முடியாது… ஆனா தினேஷ் கார்த்திக்கை?- டி 20 உலகக் கோப்பை குறித்து ரோஹித் அப்டேட்!

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:47 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று தற்போது சொல்லப்படுகிறது. அவர் அணியில் இடம்பெற்றாலும் அவருக்கான இடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் டி 20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் டி 20 அணிக்கான கேப்டனான ரோஹித் ஷர்மா கில்கிறிஸ்ட் நடத்தும் ஒரு பாட்காஸ்ட் சேனலில் பேசும்போது “தோனியை சமாதானப்படுத்துவது கடினம். அவர் டி 20 உலகக் கோப்பைக்காக வெஸ்ட் இண்டீஸ் வரமாட்டார் என நினைக்கிறேன். ஆனால் அமெரிக்கா வருவார். ஏனென்றால் சமீபகாலமாக அவர் கால்ஃப் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சமாதானப்படுத்துவது எளிது” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments