Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒரு சிறந்த கேப்டனாக செயல்படவில்லை…. ரோஹித் ஷர்மா ஒப்புதல்!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:27 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்த நிலையில் அதை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வொயிட்வாஷ் தோல்விக்குப் பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா கேப்டனாக தான் சரியாக செயல்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அதில் “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை.  ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சி ஆட்டத்தின் போது கே எல் ராகுலுக்குக் காயம்… மைதானத்தில் இருந்து வெளியேறினார்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இந்தியாவுக்கு மாற்ற பேச்சுவார்த்தையா?

சிறுபிள்ளைத்தனமாக இந்தியா நடந்துகொள்கிறது… கண்டனத்தைத் தெரிவித்த பாகிஸ்தான் பவுலர்!

அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி

ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது… ஷமியைப் புகழ்ந்த பெங்கால் அணிக் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments