இந்தியாவுக்கு எதிராக மோதிய வாழ்வா சாவா போட்டியில் மிக மோசமாக பேட் செய்த இங்கிலாந்து அணி 129 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. லீக் போட்டிகளில் இது இங்கிலாந்து அணியின் ஐந்தாவது தோல்வியாகும் இதனால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட கனவாகியுள்ளது.
தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா மூத்த பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.
அவரின் பேச்சில் “இன்று எங்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. எங்களால் பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைக்க முடியவில்லை. எங்களை பொறுத்தவரை 30 ரன்கள் குறைவாக சேர்த்திருந்தோம். ஆனால் எங்கள் பந்துவீச்சு அசாதாரணமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த பவுலர்கள் சிக்கல் வரும் போது முன்னணியில் நிற்கின்றனர். உலகக் கோப்பையின் மிகச்சிறந்த பந்துவீச்சு அட்டாக் என்றால் அது இந்தியாதான். அணிக்குள் இருக்கும் வீரர்களுக்கு இணையான பவுலர்கள் பென்ச்சிலும் இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.