Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் நெட் பிராக்டிஸ் எப்படி இருக்கிறது… கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ரியாக்‌ஷன்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:03 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி மோசமான காலகட்டத்தில் இருந்து வருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்ட கோலி, சஹால் பந்துகளில் க்ளென் மேக்ஸ்வெல் போல ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆடினார். மரபான ஷாட்களை விளையாடும் கோலி, இந்த ஷாட்களை விளையாடியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

இந்நிலையில் இப்போது கோலி பற்றி பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “கோலி, வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மீதான விமர்சனங்களுக்கு அவர் பெரிய அளவில் கவனம் செலுத்துவதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு மாத ஓய்வுக்குப் பின்னர் அவர் புத்துணர்ச்சியோடு மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments