Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நான் ஆசைப்பட்டேன்.. ஆனால்?- ரோஹித் ஷர்மா வருத்தம்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:37 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது. டிராவிட் நினைத்திருந்தால் அவர் பயிற்சியாளராக தொடர மீண்டும் விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் டிராவிட் குறித்து பேசும்போது, “நான் மீண்டும் டிராவிட் பயிற்சியாளராக தொடரவேண்டும் என நினைத்தேன். அதை அவரிடம் சொல்லவும் செய்தேன். ஆனால் அவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். அவரோடு பணியாற்றிய காலத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில்  இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் புதிய பயிற்சியாளராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. விரைவில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments