Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து விளையாடியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:47 IST)
பயிற்சியில் கால் பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி நடைபெற்ற நிலையில், அதற்கான வார்ம் அப் பயிற்சியில் ஈடுபட்ட போது, கிரிக்கெட் வீரர்கள் கால் பந்து விளையாடினர்.

அப்பயிற்சியின் போது இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காருமான ரோரி ஜோசஃப் பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், நான்கு மாதங்களுக்கு ஓய்வு தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ரோரி பேர்ன்ஸ் இலங்கை சுற்றுப்பயணத்தை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments