Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு மாற்று நான் இல்லை – மனம் திறந்த இந்திய விக்கெட் கீப்பர்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (08:42 IST)
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா தான் தோனியின் இடத்தை நிரப்பவில்லை எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் தோனிக்குப் பின்னான விக்கெட் கீப்பர்கள் வரிசையில் விருத்திமான் சஹா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இதில் டெஸ்ட் போட்டிகளில் சஹாவுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக அணியில் இடம்பெற்று இருந்தாலும் தோனி இருந்ததால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சமீபத்தில் தனது இடம் குறித்து பேசிய சஹா ‘நான் தோனிக்கு மாற்று இல்லை. டோனி ஓய்வு பெற்ற பிறகு எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் அறிமுகப் போட்டியில் லஷ்மன் மற்றும் ரோஹித் இருவரும் காயமடைந்ததால் தோனி எனக்கு வாய்ப்பு அளித்தார். அதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கீப்பராக, பேட்ஸ்மேனாக, வேகமாக ஸ்டெம்பிங் செய்வது என எம்எஸ் தோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments