Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தெறிக்கவிட்ட தென்ஆப்பிரிக்கா: ஆஸ்திரேலியாவுக்கு 612 ரன்கள் இலக்கு

தெறிக்கவிட்ட தென்ஆப்பிரிக்கா: ஆஸ்திரேலியாவுக்கு 612 ரன்கள் இலக்கு
, திங்கள், 2 ஏப்ரல் 2018 (19:20 IST)
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா அணிக்கு 612 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 
 
தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக மார்க்கம் 152 ரன்களும், பவுமா 95 ரன்களும் எடுத்தனர்.
webdunia
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்து ஆல்-ஆவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பெயின் 62 ரன்கள் எடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 267 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதிகப்பட்சமாக பிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார்.
 
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவது முடியாத காரியம். அதனால் தென்ஆப்பிரிக்கா அணி தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மித்திற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் கிளாசன்