Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசன் வந்தால் அவனுக்கே அரியாசனம்.. இந்த முறை ஐபிஎல் கப் யாருக்கு? – ‘சின்ன தல’ ரெய்னாவின் விருப்பம் இதுதான்!

Kohli Dhoni

Prasanth Karthick

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (10:07 IST)
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த முறை யார் ஐபிஎல் கப் வென்றால் சிறப்பாக இருக்கும் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.



2008 முதலாக நடந்து வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கு இந்தியா முழுவதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா 5 முறை கோப்பை வென்றுள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி பல முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்தவர், சிஎஸ்கே ரசிகர்களால் ‘சின்ன தல’ என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. இந்த முறை ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும் என தன் விருப்பத்தை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா “2024 ஐபிஎல் கோப்பையை விராட் கோலியின் ஆர்சிபி அணி கையில் ஏந்த வேண்டும் என நான் விரும்புகிறேன். நீண்டகாலமாக கோப்பையை வெல்லாத அந்த அணி, ஒருமுறையாவது வெற்றி பெற வேண்டும். விராட் கோலி இதற்காக ஒவ்வொரு சீசனிலும் கடுமையாக உழைத்துள்ளார். இந்த முறை கோப்பையை வெல்ல அவர் தகுதியானவர் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா மட்டுமல்ல 16 ஆண்டுகளாக ஆர்சிபி அணியினரின் வேண்டுதல் கூட விராட் கோலிக்காகவாவது ஐபிஎல்லில் ஆர்சிபி ஒருமுறையாவது கோப்பை வெல்ல வேண்டும். அதுவும் விராட் கோலி இருக்கும்போதே நிகழ வேண்டும் என்பதுதான். 'அரசன் வந்தால் அவனுக்கே அரியாசனம்’ என்பது ஆர்சிபியின் நீண்ட கால ஆரூடம். இத்தனை ஆண்டுகால ரசிகர்களின் ஏக்கம் இந்த ஆண்டு பலிக்குமா என பார்ப்போம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பவுலர்கள் பேட் செய்வதை மிகவும் கடினமாக்கிவிட்டார்கள்… பென் ஸ்டோக்ஸ் பாராட்டு!