Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியக் கோப்பை சம்பளம் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கிறேன்… சூர்யகுமார் யாதவ்!

Advertiesment
ஆசிய கோப்பை

vinoth

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (08:23 IST)
நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

ஆனால் வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது. அதே போல பாகிஸ்தான் அணிக் கேப்டன் சல்மான் அலி ஆஹாவும் ரவி சாஸ்திரியிடம் போட்டிக்குப் பிந்தைய உரையாடலில் கலந்துகொள்ள மறுத்தார்.

இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் பேசும்போது “ஆசியக் கோப்பை தொடரின் மூலம் எனக்குக் கிடைத்த சம்பளம் முழுவதையும் இந்திய ராணுவத்துக்கும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொடுக்கிறேன். அவர்கள் எப்போதும் என் எண்ணத்தில் இருப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை வெற்றி: கோப்பையின்றி கொண்டாடிய இந்திய அணி - இணையத்தில் பரவிய மீம்ஸ்!