Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர் உணர்ந்து கொள்ள.. இது மனிதக் காதல் அல்ல..! – ‘தல’ தோனிக்கு சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

Prasanth Karthick
திங்கள், 4 மார்ச் 2024 (08:54 IST)
குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடல் வைரலாகி வரும் நிலையில் அதை வைத்து சிஎஸ்கே அணி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.



சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் குணா குகையை பார்க்க சென்று அதில் உள்ள பள்ளத்தாக்கில் சிக்கிக் கொண்ட நண்பனை மீட்க சக நண்பர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை படமாக்கியிருந்தார்கள். நட்பையும், அன்பையும் சிறப்பாக காட்சிப்படுத்திய இந்த படம் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது.

அதில் கமல்ஹாசனின் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் இடம்பெற்றதை அடுத்து சமூக வலைதளங்கள் முழுவதும் அந்த பாடல் பெரும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியும் அந்த பாடலை வைத்து வீடியோ எடிட் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே பெற்ற த்ரில்லிங் வெற்றி காட்சிகளும், அதை வீட்டிலிருந்து கண்டு ஆனந்த கண்ணீர் விட்ட ரசிகர்களின் காட்சிகளையும் தொகுத்து வெளியாகியுள்ள அந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அதில் “அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா?” என்ற இடத்தில் தோனி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments