Publish Date: Tue, 30 Jul 2024 (08:50 IST)
Updated Date: Tue, 30 Jul 2024 (08:52 IST)
TNPL தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுகள் நடந்து வருகின்றன. கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த முதல் ப்ளே ஆஃப் போட்டியில் மதுரை மற்றும் சேப்பாக் அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் ஒருவர் அடித்த சிக்ஸ், மைதானத்தைத் தாண்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் சென்று விழுந்தது. அப்போது அந்த தோட்டத்தின் உரிமையாளர் அந்த பந்தை எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.
இது சம்மந்தமான காட்சிகள் மைதானத்தில் இருந்த கேமரா மேனால் படமாக்கப்பட்டு பகிரப்பட அது இணையத்தில் வைரல் ஆனது. இதைப் பார்த்து வர்ணனையாளர் “அந்த பந்தின் விலை 12000 ரூபாய். அதனால் பந்தைக் கொடுத்துவிடுங்கள்” எனப் பேசியது சிரிப்பை வரவழைத்தது.