Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக பேட்டிங் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் : ஆப்கானிஸ்தானின் திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (15:29 IST)
உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த உலக கோப்பையில் டாஸ் வென்று பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸ் தேர்வு செய்வது இதுவே முதல்முறை. பந்துவீச்சை தேர்வு செய்யும்போதெல்லாம் எதிரணிக்கான ரன் அளவை தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு அளவுக்கு பேட்டிங்கில் வலிமை இல்லை என்பதால், இரண்டாவதாக விளையாடும்போது இலக்கை அடைவது சிரமமானதாக இருக்கிறது.

அதனால் இந்த முறை முதலில் பேட்டிங் செய்து ரன் இலக்கை தீர்மானித்துவிட்டு பிறகு பந்துவீசினால் எளிதாக வெற்றிபெறலாம் என வெஸ்ட் இண்டீஸ் வியூகம் வகுத்திருப்பதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. ஆனாலும் கடைசி வரை அயராது விளையாடும் அவர்களது திறனை குறைத்து மதிப்பிட முடியாதுதான். அதுபோல வெஸ்ட் இண்டீஸ் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 6 தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. எனவே இரு அணியில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஆட்டமாவது வென்றுவிட வேண்டும் என்பதில் இன்று ஆப்கானிஸ்தான் உறுதியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments