Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்த விராட் கோலி!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:37 IST)
விறுவிறுப்பாக நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டாஸ் 66 ரன்னும், ஹசன் 51 ரன்னும், மஹ்முதுல்லா 46 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழ்ப்பிற்கு 256 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சதமடித்தன் மூலம் விராட் கோலி கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து சதமடித்து அசத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அவர் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் சதம் அடிப்பதற்காக கோலி, பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார். சிங்கிள் எடுக்கவில்லை. இது கோலி சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக அவர் மேல் குற்றச்சாட்டு எழவும் காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments