Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தன வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்… நான்கு ரன்கள் ஓடியே எடுத்த கோலி!

Advertiesment
PBKS vs RCB

vinoth

, திங்கள், 21 ஏப்ரல் 2025 (08:45 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் அணியை 157 ரன்களுக்குள் சுருட்டியது. பஞ்சாப் அதிரடியாக தொடங்கினாலும் அந்த அணி ஒரு கட்டத்தில் விக்கெட்களை இழக்க பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி இலக்கை எளிதாக எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியில் விராட் கோலி தேவ்தத் படிக்கல் அடித்த ஒரு பந்துக்கு ஓடியே நான்கு ரன்கள் சேர்த்தார். 36 வயதில் ஒரு இளம் வீரருக்கு நிகராக கோலி நான்கு ரன்கள் சேர்த்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு போட்டியில் கோலி ரன் ஓடும்போது மூச்சுவாங்கி, அருகில் இருந்த சஞ்சு சாம்சனை தன்னுடைய இதயத்துடிப்பை சோதிக்க சொன்னார். அது சம்மந்தமானக் காட்சிகள் வெளியான போது கோலிக்கு வயசாகிவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் பரிதாபப்பட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலின் மூலம் கோலி தான் இன்னும் அதே இளமையோடும் உத்வேகத்தோடும் இருப்பதாகப் பதிலளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவுக்கு அச்சுறுத்தல் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!