Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்காக அறிமுகமாகும் RCB வீரர்… ஜிம்பாப்வே தொடரில் சேர்ப்பு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:43 IST)
ஜிம்பாப்வே தொடரில் காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகியதை அடுத்து ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடருக்கான அணியில் கே எல் ராகுல் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் தற்போது துணைக் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதில் தற்போது RCB அணிக்காக விளையாடிய ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக அறிமுகமாகும் முதல் தொடர் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments