Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஏன் இந்த தொடருக்கு ஆஷஸ்ன்னு பெயர் தெரியுமா? - சுவாரஸ்யமான கிரிக்கெட் வரலாறு!

ஏன் இந்த தொடருக்கு ஆஷஸ்ன்னு பெயர் தெரியுமா? - சுவாரஸ்யமான கிரிக்கெட் வரலாறு!
, வியாழன், 15 ஜூன் 2023 (14:29 IST)
எப்படி இப்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் ஒரு வெறியோடு பார்க்கிறார்களோ அதுபோல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர்கள் வெறியோடு பார்க்கும் ஒரு தொடர்தான் ஆஷஸ்.

இந்த ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

1882 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி ஓவலில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை வென்றது. அதனை ஆங்கிலேயே ஊடகங்கள் “இங்கிலாந்து கிரிக்கெட் மரணமடைந்துவிட்டது. அதன் உடல் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது” எனக் கடுமையாக விமர்சித்து எழுதினார்கள்.

இதனால் அவமானப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது அணியின் கேப்டன் ஐவோ பிளிக் “இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை மீண்டும் இங்கிலாந்துக்கே கொண்டு வருகிறோம்” எனக் கூறி பெருமிதப்பட்டார். இங்கிலாந்து திரும்பிய அணிக்கு சாம்பல் நிறைந்த ஒரு பெட்டகத்தை சில பெண்கள் பரிசாக அளிக்க அன்றிலிருந்து சாம்பலை குறிக்கும் ஆஷஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் போட்டியில் 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… வியக்க வைத்த நியுசிலாந்து அணி!