ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய 3வது டி20 போட்டியில் விராட் கோலி 6 ரன்கள் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி 6 ரன்கள் அடிப்பதன் மூலம் புதிய சாதனை படைக்கவுள்ளார்.
6 ரன்கள் விராட் கோலி அடித்தால், டி-20 கிரிக்கெட்டில் உலக அளவில் 12,000 ரன்கள் அடித்த 4 வது வீரர் மற்றும் இந்திய அளவில் முதல் வீரர் என்ற சாதனை படைப்பார்.
இதற்கு முன்னதாக முதல் 3 இடங்களில் கிறிஸ்கெயில் 14,994 ரன்களுடன் முதலிடத்திலும், சோயிப்மாலிக் 12993 ரன்களுடன் 2வது இடத்திலும், கைரன் பொல்லார்டு 12,454 ரன்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
கோலி 11,994 ரன்களுடன் இந்திய அளவில் முதலிடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 11,035 ரன்களுடன் 2 வது இடத்திலும் உள்ளனர்.