Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களால் நாட்டிற்கே அவமானம்; ஸ்மித்தை வறுத்தெடுக்கும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (13:08 IST)
பந்தை சேதப்படுத்திய விஷயத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், நாட்டிற்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்துவிட்டதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார்.
 
இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பேன்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த கீழ்த் தரமான செயலால் உலக நாட்டின் முன் ஆஸ்திரேலியா தலை குனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், இந்த விமர்சனத்தில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகும் எனவும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் ஸ்மித்தை விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments