Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நம்பி மோசம் போன ரசிகர்: டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (14:31 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த தோனியை நம்பியதால் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, கடும் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், டெல்லியில் உள்ள சட்டவிரோத சூதாட்ட சந்தையில், நேற்றைய அரையிறுதி போட்டியின்போது இந்தியாவுக்கு ஆதரவாக பந்தயம் கட்டிய ஒருவருக்கு 100 கோடிக்கும் மேல் நஷ்டம் ஆகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, நேற்றுக்கு முந்தினம் ஆடிய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆனால் நேற்று பேட்டிங் செய்த இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராத் கோலி ஆகியோரை இழந்தது.

இதன் பிறகு தோனி களத்தில் இறங்க, தோனியின் ஆட்டத்தை நம்பி ஒருவர் பல கோடி ரூபாய்களை பந்தயம் கட்டியுள்ளார். முதல் 4 விக்கெட்டுகள் விழுந்தவுடன் சிலர் நியூஸிலாந்து வெற்றி பெரும் என பந்தயம் கட்டினர். ஆனாலும் தோனியை நம்பியே அந்த நபர் பல கோடி ரூபாயை பந்தயம் கட்டியுள்ளார்.

ஆனால் தோனி அவுட் ஆனவுடன், ஏமாற்றமடைந்தார். பின்பு அவர் பந்தயம் கட்டிய பல கோடி ரூபாய் பணம் நஷ்டமானதில் மன உளைச்சல் ஏற்பட்டது. பந்தயத்தால் நஷ்டமான பணம் 100 கோடியைத் தாண்டும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments