Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி ஓய்வு குறித்து பேசினாரா? தோல்விக்கு பின் கோலி பேட்டி!

Advertiesment
ICC Cricket World Cup 2019
, வியாழன், 11 ஜூலை 2019 (08:46 IST)
தோனி ஓய்வு குறித்து பேசினாரா என செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 
 
நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது நியூஸிலாந்து. 240 ரன்கள் இந்தியாவுக்கு பெரிய இலக்கு இல்லையென்றாலும் நியூஸிலாந்தின் வலிமையான பந்துவீச்சை இந்தியா சமாளிக்கவில்லை. 
 
இந்திய அணி வீரர்கள் துவக்கம் முதலே சொதப்பிய நிலையில் அணியின் வெற்றிக்காக தோனி மற்றும் ஜடேஜா சற்று போராடினர். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
ICC Cricket World Cup 2019
இந்நிலையில் தோல்விக்கு பின்னர் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, போட்டியின் முதல் 45 நிமிடங்கள் மிகவும் மோசமாக அமைந்தது. நியூசிலாந்த் வீரர்கல் சிறப்பாக பந்து வீசினர். இந்திய வீரர்கள் தவரு செய்யும் வகையில் அவர்களது பந்து வீச்சு இருந்தது. இருப்பினும் நியூசிலாந்த வெற்றி பெற தகுதியான அணிதான் என கூறினார். 
 
இதன் பின்னர் தோனியின் ஓய்வு குறித்து கேட்கப்பட்டதற்கு, தோனி தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியின் தோல்வியால் ஆத்திரம்: வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்