சமூக வலைத்தளமான டிவிட்டரில் #VirushkaDivorce என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பதும் தற்போது அவர் ’பாதல் லோக்’ என்ற வெப்தொடரை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த வெப்தொடர் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வெப்தொடர் குறித்து புகார் ஒன்றை உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ நந்த நந்த கிஷோர் என்பவர் காவல்நிலையத்தில் அளித்தார்.
அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ’பாதல் லோக்’ வெப்தொடரில் தன்னுடைய அனுமதி இன்றி தவறாக பயன்படுத்தி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த வெப்தொடர் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தகிஷோர் ’நாட்டிற்காக விளையாடும் தேச பக்தராக இருக்கும் விராட் கோலி குற்றச்செயல்களில் ஈடுபடும் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார்.
அப்போது முதல் விராட் கோலி - அனுஷ்கா சர்மா விவாகரத்து விவகாராமாக மாறியது. இந்நிலையில் இன்று காலை முதல் #VirushkaDivorce என்ற ஹேஷ்டேக் காரணமின்றி டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்களை குறிப்பிட்ட நகர்களை கடுமையாக பாதிக்கும் என தெரிந்த நிலையிலும் இணையவாசிகள் இவ்வாறு இருப்பது அதிருப்தியையே ஏற்படுத்துகிறது.