Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உலகிலே நாம் யாவருமொன்றே... நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம்

உலகிலே நாம் யாவருமொன்றே... நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம்
, வியாழன், 6 செப்டம்பர் 2018 (19:50 IST)
உலகிலே நாம் யாவருமொன்றே... நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம் 
பேச்சுவார்த்தையின் மூலம் தீா்வு 
தீா்க்க முடியாத பிரச்சனைகள் என்பது இந்த உலகி்ல் இல்லவே இல்லை. காலத்தின் மாறுதலால் தொடங்கிய பரிமாணத்தினால் மனிதனுக்கு ஏற்பட்ட மிதமிஞ்சிய அறிவும் கூட மனிதா்களுக்குள்ளேயே பல ஈகோவைத் தோற்றுவிக்கிறது. 
 
நம் நாட்டில் வேதகாலத்தில் இருந்த சாதிபேதங்கள் இப்போது சற்று குறைந்துள்ளது போலத் தெரிகிறது ஆனால் அதுமுற்றிலும் ஒழிந்து போனது  என்று உண்மையாய்ச் சொல்லுவதற்கில்லை. 
 
ஆயினும் இந்த உலகத்தை உற்று நோக்கும் போது சிரியாவில் உள்நாட்டுக் கலவரங்கள்; ஆப்கானில் தீவரவாதிகளின் தாக்குதல்கள்; இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனைகள்; இந்தியா பாகிஸ்தான் இடையே காஸ்மீரத்துப் பிரச்சனை; வடகொரியா தென்கொரியா இடையோன பிரச்சனைகள் இருக்கிறது.
 
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் எழுந்த வா்த்தகப் போர் போன்றவற்றைப் பற்றி யோசிக்கையில் ஒருவரை ஒருவா் அனசரித்துச் செல்வது போலத் தேசத்துக்கு தேசம் வேற்றுமைகளைக் களைந்து விட்டுக்கொடுத்துச் சென்றால், அல்லது பேச்சுவார்த்தையின் மூலம் தீா்வு காண முயன்றால் மேலெழுகின்ற போர்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் மனஸ்தாபப் புகைச்சல்களுக்கும் தேசங்களுக்கு இடையேயான பகைகளுக்கு இடமில்லாமல் செய்து; எதையும் அமைதி வழியில் தீா்வு காண்பதன் மூலமாய்ப் பரஸ்பரமான ஒரு சமாதானத்துக்கான வித்தை அன்பின் மூலதனமாக மாற்றி அதை நாம் மனிதா் நெஞ்சங்களில் ஆழமாக விதைக்கமுடியும் என்று உறுதியாகக் கூறலாம். 
webdunia
சகலகலா வல்லவா்கள் : மனிதா்கள்
 
தேசங்களிடையே எழுகின்ற பிரச்சனைகள் எல்லாம் காளானைப் போலத் தான் தோன்றித் தனமாக முளைப்பதில்லை என்பது நாம் அறிந்ததே. ஆனால் அப்படி ஒரு சிறு பிரச்சனை அது விஸ்வரூபம் எடுத்து  பல உயிர்களைக் காவு வாங்கக் காரணமாகி விட்டால் நாம் பண்பட்ட நிலவுலகில்தான் மாபெரும் ஆறறிவு படைத்த சகலகலா வல்லவா்களாக உயிர் வாழ்கிறோம் என்று சொல்லி நாம்  வெறும் புகழுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு பேருக்குப் பெருமையும் விளம்பரமும்  தேடிக் கொள்வதில் இங்கு அா்த்தமே இல்லை.
 
ஒரு தெய்வீகம் உணா்தப்படும்:
 
எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், நாம் என்ன மாதிரியான கல்வி சொத்துக்கள் கொண்டிருந்தாதும், வசதிவாய்ப்புகள் பெற்றிருந்தாலும்,  இந்த ஒற்றை வாழ்வானது இம்மண்ணில் புதையும் வரையுமாவதும் அவனியில் நாம் யாவருமொன்றெ எனக்கருதி நெஞ்சில் அன்பெனும் நேசத்தை நிறைப்போம். அதனால் வாழும் வாழ்க்கை அா்த்தப்படும். ஒருவா் வாழ்ந்த வாழ்வின் மூலமாய்ப் பிறருக்குள்ளும் ஒரு தெய்வீகம் உணா்தப்படும் என்று தீ்ர்க்கமாய் நம்புவோம். உலகம் உய்ய இனிமேலாவது நாம் மனிதா் என்ற ஓன்றுபட்டவராக வாழ முடிவெடுப்போம்.மனிதநேயத்துக்கு மாண்புள்ள முடிசூடுவோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த விஷயத்தில் ரஜினி கருத்து சொல்ல தயங்குவது ஏன்? கஸ்தூரி கேள்வி