Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முடக்கு வாத நோயை விரட்டும் முடக்கற்றான் மூலிகை !!

முடக்கு வாத நோயை விரட்டும் முடக்கற்றான் மூலிகை !!
முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது. 

மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, வாதம், முடக்குவாதம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது.
 
ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும்  சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.
 
பிரச்சனையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும். 
 
இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி  பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும். 
 
மேற்சொன்ன பிரச்சனை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த  முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச்செய்யும் கற்றாழை ஜெல் !!