Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

புனித வெள்ளியும் இயேசுவின் எழு வார்த்தைகளும்...

புனித வெள்ளியும் இயேசுவின் எழு வார்த்தைகளும்...
, புதன், 28 மார்ச் 2018 (20:10 IST)
உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்கநாளாகதான் அனுசரிக்கப்படும். ஆனால், கிருஸ்துவர்கள் இயேசுவை சிலுவையில் ஏற்றிய நாளை குட் ப்ரைடே அல்லது புனித வெள்ளி என அழைக்கின்றனர். 
 
புனித வெள்ளி அன்று கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும். இந்த ஆண்டு புனித வெள்ளி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெறவுள்ளது. புனித வெள்ளி தினத்தன்று இயேசு கூறிய ஏழு வார்த்தைகள் அனைத்து ஆலயங்களிலும் பிரசங்கிக்கப்படும்.
 
இயேசுவின் ஏழு வார்த்தைகள் பின்வருமாறு...
 
முதலாம் வார்த்தை: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
 
இரண்டாம் வார்த்தை: இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 
மூன்றாம் வார்த்தை: இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.
 
நான்காம் வார்த்தை: ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
 
ஐந்தாம் வார்த்தை: அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
 
ஆறாம் வார்த்தை: இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
 
ஏழாம் வார்த்தை: இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை!