Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபிபா உலகக்கோப்பை இரண்டாவது அரைஇறுதிப்போட்டி: இங்கிலாந்து- குரோஷியா அணிகள் இன்று மோதல்

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (18:07 IST)
ஃபிபா உலகக்கோப்பை காலபந்து போட்டியின் அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து- குரோஷியா அணிகள் இன்று மோதவுள்ளன.
 
ரஷியாவில் நடந்து கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கால்இறுதி சுற்றில் இங்கிலாந்து, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து, நேற்று நடைபெற்ற முதல் அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு நடக்கவுள்ளது. 
 
இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணி 1966ம் ஆண்டு  உலகக்கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. குரேஷியா அணி 1998ம் ஆண்டிற்கு பிறகு அரைஇறிதிக்குள் நுழைந்துள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்