ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 20 ஜிபி ஃப்ரீ டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் நிறுவனக்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், தங்களது நிறுவனத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.
அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், நஷ்டத்தை தவிர்க்கவும் புதிய ஃப்ரி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை பற்றிய முழு விவரம் பின்வருமாறு...
குறைந்தபட்சம் 5 ஜிபி முதல் அதிகபட்சம் 20 ஜிபி வரை ஃப்ரி டேட்டா வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரீசார்ஜ் பேக்கை பொறுத்து டேட்டா அளவு 5ஜி, 10ஜி மற்றும் 20ஜிபி வரை மாறுபடும். ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
இந்த ஃப்ரி டேட்டா ரீசார்ஜ் கணக்கில் சேர்க்கப்படாது. ஆனால், ஏர்டெல் வைபை மூலம் இதை பயன்படுத்திக்கொள்ளாம். ஏர்டெல் வைபை 500 மெட்ரோ நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. @Free Airtel Wi-Fi என்ற பெயரில் இயங்கும் இணைப்பை கொண்டு டேட்டாவை பெறலாம்.