ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தை போல தற்போது ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஜியொ நிறுவனம் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கல் வசம் இழுத்தது போல ஏர்டெல் நிறுவனமும் பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஒட்டு மொத்தமாக 105 ஜிபி டேட்டா, 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச வாய்ஸ் கால்ஸ், தினமும் 90 இலவச எஸ்எம்எஸ் ஆகியவையும் வழங்கபப்டுகிறது.
ஆனால், இந்த சலுகையை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில், இதர்கு முன்னர் வழங்கப்பட்ட ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ் 84 நாட்கள் வழங்கப்பட்டது.
இப்போது 1 ரூபாயை குறைத்துவிட்டு என்னத்தான் தினமும் 0.5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைத்தலும் வேலிடிட்டி நாட்கள் 70 நாட்களாக உள்ளது. இதனால், இந்த ஆஃபரால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக எந்த பயனும் இல்லை என தெரிகிறது.