நோக்கியாவின் புதிய நோக்கியா 8 மாடல் ஸ்மார்ட்போனில் Bothie என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் செல்பி மோகத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா எதோ ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் பயன்படுத்த முடியும்.
ஆனால், நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன்பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு Bothie என பெயரிடப்பட்டுள்ளது.
Bothie வீடியோவை நேரடியாக யூடியூப் மற்றம் பேஸ்புக்கில் லைவ் ஆக ஒளிபரப்பும் வசதியும் நோக்கியா 8-ல் உள்ளது.
நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:
# 5.3 இன்ச் டச் ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ், ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர்,
# 4 GB ராம் மற்றும் 64 GB ரோம், 13+13 MP டூயல் கேமரா, 13 MP முன்பக்க கேமரா,
# 3090mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.