பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் மெம்பர்ஷிப் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் மெம்பர்ஷிப் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ ப்ரைம்-க்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் ஸ்டார் மெம்பர்ஷிப் பற்றிய முழு விவரம் பின்வருமாறு...
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான பிஎஸ்என்எல் ஸ்டார் மெம்பர்ஷிப் திட்டத்தின் மதிப்பு ரூ.498. இதன் திட்டத்தின் ஒட்டுமொத்த வேலிடிட்டி 365 நாட்கள், ஆனால் டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் வேலிடிட்டி 30 நாட்கள்.
இந்த திட்டத்தில் 30ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1,000 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் 30 நாட்கலில் தீர்ந்த பின்னர் STV 97 திட்டம் அல்லது STV 477 திட்டத்தில் ரீசரஜ் செய்துள்ளலாம்.
STV 97 திட்டம்மானது ரூ.76-க்கும் மற்றும் STV 97 திட்டமானது ரூ.407-க்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.