பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் சிம் இல்லாத மொபைல்போன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைவை வழங்க இருக்கிறது.
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த சேவைக்கு சிம்கார்டு தேவையில்லை. ஒரு 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். வை-பை இணைப்பு அல்லது மொபைல் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம்.
இந்த சேவையை பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்த முடியும்.