கடந்த சில வாரங்களில் வேகமாக விலை உயர்ந்த தங்கம் 32 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் இந்த வார இறுதிக்குள் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று சவரனுக்கு 272 ரூபாய் விலை உயர்ந்து 22 காரட் தங்கம் 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து 12 ரூபாயாக உள்ளது. தங்கம் விற்பனையில் முதன்முறையாக தங்கம் விலை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு விலை உயர்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
வரலாறு காணாத இந்த விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.