Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

எல்.ஐ.சி-யின் ரூ.63,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு !

Advertiesment
LIC
, திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:04 IST)
பொதுப்பங்கு வெளியீட்டிற்கான செபியிடம் ஆவணங்களை எல்.ஐ.சி சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வரைவு அறிக்கையை பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் ஆன செபியிடம் எல்ஐசி எல்ஐசி நிர்வாகம் தாக்கல் செய்தது. 
 
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர் துகின் கந்த பாண்டே என்பவர் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய பங்கு சந்தை வளரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5% பங்குகள் விற்கப்படுகிறது. இதுவே பொதுப்பங்கு வெளியீட்டில் இடம்பெறும் உச்சப்பற்ற தொகையாகும். பங்கு வெளியீட்டில் எல்ஐசியின் முதுகெலுமாக திகழும் 31 கோடி பாலிசிதாரர்களுக்கு 5% சலுகை வழங்கப்படும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… தப்புமா பதவி?