Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஃப்ரி.. ஃப்ரி.. ஃப்ரி..: ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு!

ஃப்ரி.. ஃப்ரி.. ஃப்ரி..: ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு!
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (12:28 IST)
என்னதான் டெலிகாம் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு போட்டி இருந்தாலும், தற்போது அனைத்து நிறுவனங்களும் முன்வந்து, இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். 
ஆம், கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது உடமைகளையும் வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக்கொள்ள தடை ஏதும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால், டெலிகாம் நிறுவனங்கள் மக்களுக்கு இலவச சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. 
 
ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகை இவை அனைத்தும் ஒரு வாரத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 
 
ஏர்டெல்:
ஏர்டெல் சார்பில் பல்வேறு பகுதிகளில் இலவச வைபை, வாய்ஸ் கால் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் ஸ்டோர்களில் பயனர்கள் தங்களின் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகிறது. எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா அடுத்த ஏழு நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
 
வோடபோன்:
# வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.30 டாக்டைம், 1 ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், பயனர்களுக்கு டேட்டா தானாக கிரெடிட் செய்யப்படும். 
# வோடபோன், வாய்ஸ் கால் சேவையை ஆக்டிவேட் செய்ய CREDIT என டைப் செய்து 144 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியோ அல்லது *130*1# டையல் செய்தோ சேவையை பெறலாம். 
 
ஐடியா:
# ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.10 கிரெடிட் வழங்கப்படுகிறது. பயனர்கள் *150*150# என டையல் செய்து உடனடியாக டாக்டைம் பெறலாம். 
# மேலும், ஐடியா 1 ஜிபி இலவச டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்குகிறது. இலவச டேட்டா பயனர்களுக்கு தானாக ஆக்டிவேட் ஆகும். 
 
இதோடு அனைத்து நிறுவனங்களும் தங்களது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு சேவைகளை துண்டிக்கப்படாமல் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் மேலும் ஒரு சீக்கியர் படுகொலை