பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ எச்எக்ஸ்06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவலை காண்போம்...
இந்த ஸ்மார்ட்பேன்ட் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ஒஎல்இடி மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
இதய துடிப்பு சென்சார் உள்ளதால், 60 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது, மேலும், பில்ட் இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது.
லெனோவோ எச்எக்ஸ்06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:
# 0.87 இன்ச் 128x32 பிக்சல் ஒஎல்இடி டிஸ்ப்ளே
# ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
# கால் ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
# இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
# கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார், வாட்டர் ரெசிஸ்டன்ட்
# ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
# ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
# 60 எம்ஏஹெச் பேட்டரி
# கருப்பு நிறத்தில், மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது.
# இதன் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.