Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அடிவாங்கும் ஐபோன் சேல்: எக்ஸ்சேஞ்சில் ஆப்பிளுக்கு பதில் ஒன் பிளஸ்

அடிவாங்கும் ஐபோன் சேல்: எக்ஸ்சேஞ்சில் ஆப்பிளுக்கு பதில் ஒன் பிளஸ்
, புதன், 14 நவம்பர் 2018 (14:59 IST)
முன்பெல்லாம் ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவோடு பலர் இருந்தனர். ஆனால், இப்போது ஐபோன் மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு ஐபோன் விற்பணையில் ஏற்பட்டுள்ள சரிவே ஆதாரம்.
 
ஆம், ஐபோன்களின் இடத்தை ஒன் பிளஸ், சாம்சங், ரெட்மி, ஓப்போ, வீவோ உள்ளிட்ட பல பிராண்டுகள் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டன. கடண்டஹ் 3 மில்லியனாக இருந்த ஐபோன் விற்பனை இந்த ஆண்டு 1 மில்லியன் அளவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுவும் விற்பனையாகும் ஐபோன்களில் பல பழைய மாடல் ஐபோன்தான். இதற்கு 2 முக்கிய காரணம் கூறப்படுகிறது, ஒன்று அதிக விலை, மற்றொன்று ஐபோனில் உள்ள பிரச்சனைகள். 
 
தற்போது ஐபோனில் உள்ள சிறப்பு அம்சங்கள் ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்டபோன்களில் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 விலையிலேயே கிடைத்து விடுகின்றன. அப்போது எதற்கு ரூ. 80,000 கொடுத்து வாங்க வேண்டும் என்ற சிந்தனை வந்துவிடுகிறது.
 
மேலும், ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களில் 20 சதவீதத்தினர் ஆப்பிள் ஐபோன் பயனாளிகள் என்கிறார்கள். எக்ஸ்சேஞ்ச் மூலம் ஐபோன்களை மாற்றிவிட்டு ஒன்பிளஸ்ஸுக்கு பலர் மாறியுள்ளனராம். 
 
ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகமாக இருந்தாலும் மற்ற பிராண்டுகளுக்கும் ஆப்பிளுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி குறைந்து கொண்டே இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயக்க மருந்து கொடுத்து மாணவிகளுடன் உல்லாசம்: நடன ஆசிரியர் அட்டூழியம்