Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை குறைந்த ஒப்போ ஸ்மார்ட்போன்!! எவ்வளவு தெரியுமா?

Advertiesment
ஒப்போ ஸ்மார்ட்போன்
, செவ்வாய், 15 அக்டோபர் 2019 (12:51 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
 
சீன அநிறுவனமான ஒப்போ கடந்த மாதம் ஏ9 2020 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
4 ஜிபி மற்றும் 8 ஜிபி என இருவித வேரியண்ட்களில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. அறிமுக விலையைவிட ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,990-க்கு விற்கப்படுகிறது. 
ஒப்போ ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ9 2020 சிறப்பம்சங்கள்:
  • 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், டால்பி அட்மோஸ்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்ஃபி கேமரா
  • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் 
புதிய விலை மாற்றம் அமேசான் மற்றும் ஆஃப்லைன் வலைத்தளங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஓட்டு பிச்சைக்காக செயல்படுகிறார் சீமான்” ஹெச்.ராஜா ஆவேசம்