வங்கிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ரெப்போ வட்டி விகிதங்கள் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு செல்லுபடியாகாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தொழில்க மற்றும் இன்ன பிற தேவைகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவது போலவே தனியார் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் கடன் வழங்கி வருகின்றன. வங்கிகளை விட வட்டி கொஞ்சம் அதிகம் என்றாலும் பெரும் தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளை விடவும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் பணம் பெறுவது எளிதாக இருப்பதால் அதை வரவேற்கின்றன.
இந்நிலையில் சமீப காலமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) கடன் கொடுத்த நிறுவனங்களிடம் கடனை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு காட்டி தங்களுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் வட்டியில் தளர்வுகள் அளிக்கும்படி அவர்கள் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் வங்கிகளுக்கான கடன் மற்றும் வட்டிவிகிதத்தில் ரிசர்வ் வங்கி தளர்வுகளை அளித்தது. ஆனால் என்பிஎஃப்சி விஷயத்தில் எந்த சலுகையும் தர இயலாது என மறுத்துவிட்டது.
மேலும் என்பிஎஃப்சிக்களில் டெபாசிட் பெறும் நிறுவனங்கள் மற்றும் டெபாசிட் பெறாத நேரடி கடன் நிறுவனங்களையும் கணக்கில் கொண்டு வந்து புதிய விதிமுறைகள் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.