Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீன அதிபரின் காரில் உள்ள அதி நவீன பாதுகாப்பு வசதிகள் என்னென்ன தெரியுமா?

Advertiesment
சீன அதிபர்

Arun Prasath

, புதன், 9 அக்டோபர் 2019 (13:15 IST)
சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், சீன அதிபரின் அதி நவீன கார், சீனாவிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மாமல்லபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், கலாச்சாரம், வணிகம் ஆகியவை குறித்தும் இருவரும் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சண்டா மேளங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை காரில் இருந்தபடியே சீன அதிபர் கண்டுகளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கின் கார், சீனாவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கார் ”FAW” என்ற நிறுவனத்தால், சீன அதிபருக்காகவே பிரத்யேகமாக அந்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரின் மாடல் பெயர் “ஹாங்கி 5”.
சீன அதிபர்

இந்த காரில் சீன அதிபரின் பாதுகாப்புக்காக, துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு, கண்ணாடிகளும், மேலும் ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு தாக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறும், பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஆறு தானியங்கி கியர்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், 110 லிட்டர் வசதி கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.5.4 கோடி என தெரியவருகிறது.
சீன அதிபர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் பாலம் மெய்யாலுமே இருந்தது! – ஆதாரத்துடன் ஆஜர் ஆன எச்.ராஜா!