இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 282 புள்ளிகள் அதிகரித்து 36,548 ஆக முடிவடைந்தது. 17 பங்குகள் பச்சை குறியுடனும், 14 பங்குகள் சிவப்பு குறியுடனும் முடிவடைந்து இருந்தன.
கடந்த ஒரு வாரமாக சென்செக்ஸ் அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 36,699.53 புள்ளிகளாக அதிகரித்து. இதேபோல் நிப்டியும் இன்று 11,000 புள்ளிகளைத் தொட்டது.
50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச்சந்தையில் 28 பங்குகளின் மதிப்பு அதிகரித்தும், 22 பங்குகளின் மதிப்பு இறங்கியும் காணப்பட்டன. இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு...
முகேஷ் அம்பானி:
ஆயில் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிகரித்து காணப்பட்டது. இதற்கு முகேஷ் அம்பானியின் எண்ணெய் நிறுவனப் பங்குகள் முக்கிய காரணமாக அமைந்தது. 11 ஆண்டுகளுக்கு பின் இன்று இவரது பங்குகள் 100 பில்லியன் டாலாரக உயர்ந்து காணப்பட்டது.
டிசிஎஸ் நிறுவனம்:
மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் கால் இறுதி ஆண்டில் 24 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ரூபாய் மதிப்பு:
இந்திய ரூபாயின் மதிப்பு புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் வியாழக்கிழமை 19 பைசா அதிகரித்து 68.58 ஆக இருந்தது. சீனா-அமெரிக்கா வர்த்தக சண்டைக்கு இடையே, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருப்பதும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுக்கு காரணமாக அமைகிறது.