ஜியோ நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற 1 லட்சம் கோடி செலவில் புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் மீது உள்ள கடன்களை நிர்வகிக்கவும், டிஜிட்டல் வணிக மேலாண்மை செய்யவும் புதிய நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு அளித்துள்ளது.
இந்த புதிய நிறுவனம் ஜியோ நிறுச்வன கடன்களை மேலாண்மை செய்யும். இதனால் ஜியோ கடனற்ற நிறுவனமாக மாறும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனம் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு, ஃபைபர் சேவைகளையும் இனி இந்த புதிய நிறுவனமே நிர்வகிக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் பங்குசந்தையில் 9 ட்ரில்லியனுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்து ரிலையன்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் பலர் ரிலையன்ஸில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கடன் சுமைகள் முதலீடுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த புதிய நிறுவனம் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது.