இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) சேவையை சோதனை செய்து வருகிறது.
புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ நிறுவனம் வோ வைபை சேவையை மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் கேரளாவில் சோதனை செய்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது. இந்த வசதி அமலுக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் வைபை இணைப்பு மூலமே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இன்னும் சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதாவது 2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம்.
முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.