சாம்சங் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை அடிக்கடி குறைத்து வருகிறது.
அந்த வகையில் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என இரு வேரியன்ட்களில் வெளியானது.
4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.19,990 மற்றும் 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.22,990-க்கு விறபனை செய்யப்பட்டது. தற்போது இதன் இரு வேரியன்ட் மீதும் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.18,490 மற்றும் ரூ.21,490 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம்
# 25 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, லைவ் ஃபோகஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி