பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென 400 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் இன்று 420 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 120 புள்ளிகள் குறைந்து 19,675 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இஸ்ரேல் போர் காரணமாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை முதலீடு நல்ல லாபத்தை கொடுக்கும் என்றே கூறப்பட்டு வருகிறது.