Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தினமும் 4.5 ஜிபி டேட்டா: ஜியோ vs வோடபோன்...

தினமும் 4.5 ஜிபி டேட்டா: ஜியோ vs வோடபோன்...
, திங்கள், 5 மார்ச் 2018 (15:06 IST)
ரிலையன்ஸ் ஜியோ வழங்கியுள்ள ரூ.509 மற்றும் ரூ.799 சலுகைகளுக்கு நேரடி போட்டியாக வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு இரு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 
 
ரூ.549 மற்றும் ரூ.799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ல புதிய சலுகைகள் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
 
வோடபோன் ரூ.549 சலுகை: 
 
இதில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 98 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 3.5 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். 
 
தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
வோடபோன் ரூ.799 சலுகை: 
 
இதில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 126 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 4.5 ஜிபி பயன்படுத்த முடியும். 
தினசரி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
 
இந்த இரு புதிய சலுகைகளில் வோடபோனின் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினசரி 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் ஆகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா சிரியாவாக மாறிவிடும்; இஸ்லாமியர்களை எச்சரிக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்