மக்களிடம் வரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் பணம் அரசாங்கத்தால் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கும், ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொருவரும் தங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் மற்றும் அதை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் செலுத்த வேண்டும்.
அப்படி செலுத்தவில்லை என்றால், நிலவையிலிருக்கும் முழு வரித்தொகையையும் அந்தக் காலத்திற்குள் செலுத்தவில்லை எனில் ஆய்வின் போது அபராதம் விதிக்க முடியும்.
அதேபோல், வருமானவரி தாக்கல் செய்வதற்கு கடைசித் தேதிக்குள் வரிதாக்கலை செய்து முடிக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.
வேண்டுமென்றே ஒருவர் வரி தாக்கலின் போது தவறான தகவல்களை அளித்தால் சிறை தண்டனை வழங்கப்படும். சிறை தண்டனை வரி தொகைக்கு ஏற்ப மாறும்.
ஒரு தனிநபர் தனக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளையும் வெளிப்படுத்தவில்லை என தெரிந்தால், செலுத்தவேண்டிய வரியில் 10% கணக்கிட்டு, மதிப்பீடு அபராதம் விதிக்க முடியும்.
தெளிவுபடுத்தப்படாத முதலீடுகள், பணம் அல்லது சரியாக விளக்கப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத வழிகளில் வரும் வருமானம் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒரு நபர் வரி ஏய்ப்பு செய்ததற்காகப் பிடிபட்டால், சிறைத்தண்டனை நிச்சயம். வருமானத்தைக் குறைத்து காட்டும் போது, வரிக்குற்பட்ட தொகையில் 50% அபராதமாக விதிக்கப்படும்.
வருமானத்தைத் தவறாகக் குறிப்பிட்டால், வரிசெலுத்த வேண்டிய தொகையில் 200% அபராதமாக விதிக்கப்படும்.