ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்த சந்தையில் பெரிய மார்க்கெட்டை பிடித்த சியோமி அடுத்து தனது தயாரிப்பில் பல சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. அதில் ஸ்மார்ட் டிவிகளும் ஒன்று.
அந்த வரிசையில் அடுத்து 65 இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று குறிப்பிட்டு எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
65 இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடல், 7.5எம்எம் தடிமன் மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவருமாம். 4கே எச்டிஆர் தொழில்நுட்பம் கொண்டிருக்குமாம். மேலும், பேன்பு பேட்ச்வால் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 2 ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இண்டர்னல் மெமரி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இருக்கும். இதன் விலை ரூ.64,000 ஆக நிர்ணயிக்கப்படலாம்.